தமிழ்நாடு

போயஸ் தோட்ட இல்ல உரிமையாளர்களுக்கு இழப்பீடு: அமைச்சர் சி.வி. சண்முகம்

ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவிடமாக்க உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தெவித்துள்ளார். 

DIN

ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவிடமாக்க உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தெவித்துள்ளார். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி மரணம் அடைந்தார். இந்நிலையில் அவர் வாழ்ந்த 'வேதா நிலையம்', இல்லத்தை நினை வில்லமாக்கி, பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்குமாறு பல்வேறு தரப்பினரிடம் இருந்து அரசுக்கு தொடர்ந்து கோரிக்கைகள் வந்த வண்ணம் இருந்தன.

இதையடுத்து 44 ஆண்டுகளாக ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லம் அரசு நினைவில்லமாக மாற்றப்பட்டு பொது மக்களின் பார்வைக்காக அனுமதிக்கப்படும் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று அறிவித்தார். ஆனால் முதல்வரின் இந்த அறிவிப்புக்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவிடமாக்க உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெவித்துள்ளார். இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், போயஸ் தோட்ட இல்லத்துக்கு யார் உரிமையாளர்களோ அவர்களுக்கு இழப்பீடு தந்து நினைவிடமாக்கப்படும் என்றார். மேலும் போயஸ் தோட்டத்தை நினைவிடமாக்க சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமி உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை!

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: நலத் திட்ட உதவிகள் வழங்கினாா் எம்எல்ஏ

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

தேவை இல்லை என்ற நிலையை உருவாக்கினால் மது ஒழிப்பு சாத்தியம் - சி. மகேந்திரன்

ஆம்பூரில் பலத்த மழை

SCROLL FOR NEXT