தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம் 51 அடியாக உயர்ந்தது

DIN

மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 51 அடியாக உயர்ந்தது.
காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் மற்றும் மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது. நீர்வரத்துக் காரணமாக வியாழக்கிழமை காலை 48.77 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 50.83 அடியாக உயர்ந்தது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 2.06 அடி உயர்ந்துள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக நொடிக்கு 1,300 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வியாழக்கிழமை காலை அணைக்கு நொடிக்கு 21,947 கன அடியாக இருந்த நீர்வரத்து, வெள்ளிக்கிழமை காலை நொடிக்கு 15,973 கன அடியாகக் குறைந்தது. அணையின் நீர் இருப்பு 18.33 டி.எம்.சி.யாக இருந்தது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று பொதுப் பணித் துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT