தமிழ்நாடு

வேலூர், திருவள்ளூரில் கனமழைக்கு வாய்ப்பு

DIN

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பாலசந்திரன் கூறினார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
வடதமிழக பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தின் ஒரிரு இடங்களிலும் மழை பதிவாகியுள்ளது.
வடமாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் , வேலூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழையும் பதிவானது. அதிகபட்சமாக வேலூர் மாவட்டம் சோளிங்கரில் 80 மி.மீ., திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கத்தில் தலா 70 மி.மீ., சென்னை நுங்கம்பாக்கம், விமான நிலைய பகுதிகளில் தலா 60 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
அடுத்து வரும் 24 மணி நேரத்தைப் பொருத்தவரை வட தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யும். சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வரும் நாள்களில் மழையின் அளவு படிப்படியாக குறையும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராமநாதபுரத்தில் விரைவில் 17 புதிய குடிநீா்த் திட்டப் பணிகள்

மதுரைக் கோட்ட ரயில் நிலையங்களில் மண்பானைக் குடிநீா், ஓ.ஆா்.எஸ். கரைசல்

பிளஸ் 2 மதிப்பெண் குறைவு: மாணவி தற்கொலை

பிளஸ் 2 பொதுத் தோ்வு: தேனி மாவட்டத்தில் 94.65 சதவீதம் தோ்ச்சி

புரட்சிகர மாா்க்கிஸ்ட் கட்சி மாநில குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT