தமிழ்நாடு

தனியார் சொகுசுப் பேருந்தில் தீ: 45 பயணிகள் உயிர் தப்பினர்

DIN

உளுந்தூர்பேட்டை அருகே தனியார் சொகுசுப் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதில் பயணித்த 45 பயணிகள் உயிர் தப்பினர்.

திருச்சியிலிருந்து தனியார் சொகுசுப் பேருந்து ஒன்று சென்னை நோக்கி வெள்ளிக்கிழமை நள்ளிரவு சென்று கொண்டிருந்தது. பேருந்தை திருச்சி பகுதியைச் சேர்ந்த முருகேசன் ஓட்டிச் சென்றார். பேருந்தில் 45 பயணிகள் இருந்தனர்.
உளுந்தூர்பேட்டையை அடுத்த சுங்கச்சாவடி அருகே பேருந்து வந்தபோது பேருந்தின் பின்புறம் இருந்து புகை வந்தது. இதைக் கவனித்த பின்னால் வந்த வாகனங்களின் ஓட்டுநர்கள் பேருந்து ஓட்டுநர் முருகேசனிடம் கூறிச் சென்றனர்.
உடனே அவர் பேருந்தை நிறுத்தி கீழே இறங்கி புகையை நிறுத்துவதற்கு முயற்சி செய்தார். ஆனால் முடியவில்லை. இதையடுத்து, பயணிகளை அவசர அவசரமாகப் பேருந்தில் இருந்து கீழே இறங்கச் செய்தார். இதைத் தொடர்ந்து, பேருந்து தீப்பிடித்துக் கொண்டது.
ஓட்டுநரின் முயற்சியால் பேருந்தில் இருந்த 45 பயணிகளும் சிறு காயமின்றி உயிர் தப்பினர்.
தகவலறிந்த உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும், சொகுசுப் பேருந்து முழுவதும் எரிந்து சேதமடைந்தது.
இந்த விபத்தால் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து உளுந்தூர்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT