தமிழ்நாடு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

தினமணி

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய தகவலில், 
வெப்பசலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 

சென்னையைப் பொறுத்தவரை பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் செங்குன்றத்தில் அதிகபட்சமாக 13 செ.மீ., மழையும் வால்பாறையில் 11 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT