தமிழ்நாடு

ஒண்டிவீரன் மணிமண்டப மேம்பாட்டுப் பணிகளுக்கு உதவி

DIN

திருநெல்வேலியில் உள்ள விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் நடைபெற உள்ள மேம்பாட்டுப் பணிகளுக்கு தேவையான உதவிகளைச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால்.
விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினத்தையொட்டி பாளையங்கோட்டையில் உள்ள மணிமண்டபத்தில் ஒண்டிவீரன் சிலைக்கு சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் ஞாயிற்றுக்கிழமை மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது: தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி வேண்டுகோளை ஏற்று இந்த நினைவு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளேன். சட்டப்பேரவைத் தலைவர் என்ற முறையில், தமிழகத்தின் அரசில் சூழல் குறித்து எவ்வித கருத்தும் சொல்ல விரும்பவில்லை.
இந்த மணிமண்டபத்தில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளைச் செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்பேரில் ஏற்கெனவே மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒரு திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. நூலகம், பூங்கா உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான கடிதத்தை ஆட்சியர் வழங்கியுள்ளார். அதனை தமிழக முதல்வரிடம் வழங்கி மேம்பாட்டுப் பணிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில் ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி, மாநிலங்களவை உறுப்பினர் விஜிலா சத்தியானந்த், திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கே.ஆர்.பி.பிரபாகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT