தமிழ்நாடு

செட்டில்மென்ட் முடிவுக்கு வந்ததால் சேரும் அதிமுக அணிகள்: எம்.எல்.ஏ வெற்றிவேல் பேட்டி 

DIN

சென்னை: செட்டில்மென்ட் முடிவுக்கு வந்ததால் அதிமுகவின் இரு அணிகளும் தற்பொழுது சேர உள்ளதாக டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு தொடர்பாக நாளை முக்கியமான அறிவிப்பு வெளிவரும் என்று தகவல்கள்  வெளியாகியுள்ளன. இந்நிலையில் வரும் 23-ஆம் தேதி வடசென்னையில் நடைபெற உள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா தொடர்பாக ஆலோசனை செய்யும் பொருட்டு,  டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் அவரது இல்லத்தில் இன்று சந்தித்தனர்.

அப்பொழுது எம்.எல்.ஏ வெற்றிவேல் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

ஜெயலலிதாவின் இல்லத்தினை நினைவு இல்லமாக மாற்ற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வாரிசுகளிடம் ஆலோசிக்காமல் அப்படி எதுவும் செய்து விட முடியாது. மேலும் சசிகலா தற்பொழுது சிறையில் இருப்பதால், அவரிடமும் இது தொடர்பாக ஆலோசிக்க வேண்டும். இத்தனையும் மீறி அதிகாரிகள் இது தொடர்பாக ஏதேனும் முயற்சிகள் எடுக்க விரும்பினால், சட்ட ரீதியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்குப் பதிலாக பணியில் இருக்கும் நீதிபதி ஒருவரைக் கொண்டு விசாரணை நடத்தப்பட வேண்டும்.     

இரு அணிகளின் இணைப்பினை பொருத்த வரையில், செட்டில்மென்ட் முடிவுக்கு வந்ததால் அதிமுகவின் இரு அணிகளும் தற்பொழுது சேர உள்ளன. இதனால் தனக்கு என்ன ஆதாயம் என்றுதான் முதல்வர் பழனிசாமி பார்க்கிறார்.

ஆனால் தொணடரகள் மற்றும் பொதுமக்களின் ஆதரவு எங்களிடம்தான் உள்ளது. எனவே யாருக்கும் நாங்கள் யாருக்கும் அஞ்சத் தேவை இல்லை.

தனது சொந்த ஊரில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கிணற்றினைக் கூட வீட்டுக் கொடுக்க மனம் இல்லாதவர்தான் ஓ.பி.எஸ். அத்துடன் அதிமுக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் பொழுது எதிராக வாக்களித்தார். கட்சியின் சின்னமான இரட்டை இலை முடக்கப்பட்டதற்கும் காரணமாக இருந்தவர் இவர்தான்.

இவ்வாறு வெற்றிவேல் தனது பேட்டியில் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT