தமிழ்நாடு

நதிகள் இணைப்புக்காக மணல் சிற்பம்

DIN

நதிகள் இணைப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் மணல் சிற்பத்தை பரமக்குடியை சேர்ந்த ஆசிரியர் ஞாயிற்றுக்கிழமை வடிவமைத்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் சரவணன். இவர் தமிழகத்தில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை அவ்வப்போது மணல் சிற்பங்களாக உருவாக்கி வருகிறார். நதிகளை இணைப்பதன் மூலம் விவசாயத்தை பாதுகாக்கலாம் என்பதை மையமாக கொண்டு ஞாயிற்றுக்கிழமை ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் மணல் சிற்பத்தை வடிவமைத்துள்ளார். இதனை ராமேசுவரத்துக்கு வந்திருந்த யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகள் பலரும் பார்த்து ரசித்தனர். சரவணன், சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜனிடம் பாராட்டுச் சான்றிதழும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

அழகிய தீயே.....மதுமிதா

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT