சென்னை: அதிமுக இரு அணிகளின் இணைப்புக்குப் பிறகு தமிழகத்தின் துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளார்.
பலகட்ட காத்திருப்புகளுக்குப் பிறகு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக இரு அணிகளின் இணைப்பு நிகழ்வானது, ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியஇருவரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் இருவரும் பேசிய பிறகு கட்சி பதவிகள் தொடர்பாகவும், தமிழக அமைச்சரவையிலும் சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன. அதன்படி தமிழகத்தின் துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளார்.
இரு அணிகளின் பிரிவுக்கு முன்பு அவர் தமிழகத்தின் முதல்வராக இருந்தார். அதற்கு முன்னதாக இரண்டு முறைகள் என தமிழகத்தின் முதல்வராக அவர் மொத்தம் மூன்று முறைகள் பணியாற்றியுள்ளார். ஜெயலலிதா உயிருடன் இருந்த பொழுது , அவரது அமைச்சரவையில் 'நம்பர்-2' ஆக இருந்தார்.
தற்பொழுது இரு அணிகளின் இணைப்புக்குப் பிறகு அதிமுகவில் முதன்முறையாக ஓ.பன்னீர்செல்வம் தமிழகத்தின் துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.