தமிழ்நாடு

தனபாலை முதல்வராக்கினால் அதிமுக ஆட்சி நீடிக்கும்: திவாகரன்

தனபாலை முதல்வராக்கினால் அதிமுக ஆட்சி நீடிக்கும் என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் தெரிவித்துள்ளார்.

தினமணி

தனபாலை முதல்வராக்கினால் அதிமுக ஆட்சி நீடிக்கும் என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் திருவாரூரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 
ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி இல்லாத அமைச்சரவை அமைய வேண்டும். அமைச்சரவையை கேட்டு நேற்று முடிவெடுத்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது. பொறுப்பு ஆளுநரை மத்திய அரசு வைத்திருப்பதால்தான் பல சித்து விளையாட்டுகள் நடக்கின்றன. 

மு.க. ஸ்டாலின் கொல்லைப்புறம் வழியாக ஆட்சியை பிடிக்க முயற்சிக்க மாட்டோம் என கூறியுள்ளார். அவர் தரம் தாழ்ந்த அரசியல் செய்யமாட்டார். இருப்பினும், திமுக நம்பிக்கையில்லா தீர்மானம்கொண்டு வரும் பட்சத்தில் பழனிசாமி ஆதரவு கேட்டால் ஆதரவு தருவோம். அதே நேரம் 4 ஆண்டுகளை இந்த அரசு பூர்த்தி செய்யுமா என்பதை உத்தரவாதமாக சொல்ல முடியாது.

சபாநாயகர் தனபாலை முதல்வராக்கினால் அதிமுக ஆட்சி நீடிக்கும் என்றார். மேலும் டிடிவி திகனரன் இல்லத்தில் மேலும் 8 எம்எல்ஏக்கள் இருப்பதாக அவர் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

SCROLL FOR NEXT