தமிழ்நாடு

ஏழாவது மாடியில் இருந்து குதித்த மாணவி: 'நீலத் திமிங்கில' விளையாட்டு காரணமா?

விருகம்பாக்கத்தில் ஏழாவது மாடியில் இருந்து மாணவி ஒருவர் குதித்த விவகாரத்தில், 'நீலத் திமிங்கிலம்' விளையாட்டு காரணமா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

DIN

சென்னை: விருகம்பாக்கத்தில் ஏழாவது மாடியில் இருந்து மாணவி ஒருவர் குதித்த விவகாரத்தில், 'நீலத் திமிங்கிலம்' விளையாட்டு காரணமா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனது பெற்றோருடன் வசித்து வருபவர் நிவேதா(24). எம்.சி.ஏ பயின்று வரும் இவர் கடந்த திங்கள் அன்று இரவு 11 மணி அளவில் தனது குடியிருப்பின் ஏழாவது மாடியிலிருந்து குதித்துள்ளார். இடுப்பு மற்றும் தண்டுவடம் பகுதிகளில்கடுமையான காயம அடைந்துள்ள இவர் தற்பொழுது தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நிவேதா கடந்த ஒரு வாரமாக மன அழுத்தத்திற்கு உட்பட்டு காணப்பட்டதாகவும், உலகம், முழுவதும் பலர் தற்கொலை செய்து கொள்வதற்கு காரணமாக அமைந்திருந்த 'நீலத் திமிங்கிலம்' விளையாட்டு இதற்கு காரணமாக அமைந்திருக்கலாம் என்று அவரது அக்கம் பக்கத்து வீடுகளைச் சேர்ந்தவர்கள் கருத்து தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து சிகிச்சையில் இருக்கும் நிவேதாவிடம் போலீசார் இதுகுறித்து விசாரித்த பொழுது, அவர் இதனை மறுத்திருக்கிறார். அவர் அளித்த வாக்குமூலத்தில் தான் அந்த விளையாட்டை விளையாடவில்லை எனவும், நடந்தது ஒரு விபத்து என்றும் தெரிவித்துள்ளார்.

எனினும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

புரியில் 15 வயது சிறுமி மரண வழக்கில் திடீர் திருப்பம்! போலீஸ் விளக்கம்!

தமிழக மக்களின் உரிமை பறிபோகும் சூழல்! - ப. சிதம்பரம்

SCROLL FOR NEXT