தமிழ்நாடு

மு.க.ஸ்டாலினுடன் அதிமுக கூட்டணி எம்எல்ஏக்கள் சந்திப்பு

DIN

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை அதிமுக கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் ஆகியோர் செவ்வாய்க்கிழமை சந்தித்தனர்.
மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி, கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் தனியரசு, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் ஆகியோர் அண்ணா அறிவாலயத்துக்குச் செவ்வாய்க்கிழமை வந்து மு.க.ஸ்டாலினை சந்தித்து அரை மணி நேரம் அரசியல் நிலவரம் குறித்துப் பேசினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் தமிமுன் அன்சாரி கூறியது: பேரறிவாளனை பரோலில் விடுவிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் எங்களோடு இணைந்து குரல் கொடுத்ததற்காக மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தோம். எம்ஜிஆர் நூற்றாண்டையொட்டி 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளவர்களை விடுவிக்க வலியுறுத்த வேண்டும் என்று கோரினோம். அதற்கு ஸ்டாலினும் வலியுறுத்துவதாகக் கூறினார்.
மற்றபடி, பொதுவான அரசியல் விவகாரங்கள் குறித்தே பேசினோம். திராவிடக் கட்சிகளை அழித்துவிட வேண்டும் என்று பாஜக முயற்சிக்கிறது. முதலில் அதிமுகவையும், அடுத்தது திமுகவையும் அழிக்கப் பார்க்கிறது. இந்த நேரத்தில் திராவிடக் கட்சிகளைக் காக்க வேண்டிய கடமை இருக்கிறது எனவும் அவரிடம் (ஸ்டாலின்) கூறினோம். அவரும் ஆமோதித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

SCROLL FOR NEXT