தமிழ்நாடு

வேதா இல்லத்தை நினைவிடமாக்க எதிர்ப்பு: சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு

ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை அரசு நினைவிடமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

DIN

மறைந்த முதல்வர் ஜெயலலிதா 44 ஆண்டுகளாக வாழ்ந்த சென்னை போயஸ் தோட்ட இல்லம் அரசு நினைவில்லமாக மாற்றப்பட்டு பொது மக்களின் பார்வைக்காக அனுமதிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் அறிவித்தார்.

இந்நிலையில் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை அரசு நினைவிடமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.  

இதுதொடர்பாக திருச்சி முசிறியை சேர்ந்த பொறியாளர் தங்கவேல சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சட்டவிரோத பரிவர்த்தனைகள் வேதா இல்லத்தில் நடந்துள்ளதை உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவரின் வீட்டை நினைவிடமாக மாற்றக் கூடாது. எனவே, நினைவிடமாக மாற்றப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமி உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை!

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: நலத் திட்ட உதவிகள் வழங்கினாா் எம்எல்ஏ

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

தேவை இல்லை என்ற நிலையை உருவாக்கினால் மது ஒழிப்பு சாத்தியம் - சி. மகேந்திரன்

ஆம்பூரில் பலத்த மழை

SCROLL FOR NEXT