ரூ.5 ஆயிரம் கோடி தொடர்பாக தமிழக அரசு மீது நிஸான் நிறுவனம் புகார்
ஒப்பந்தத்தின் அடிப்படையில் ரூ.5 ஆயிரம் கோடி வழங்க மறுப்பதாக தமிழக அரசு மீது நிஸான் நிறுவனம் புகார் தெரிவித்துள்ளது.
ஜப்பானைச் சேர்ந்த பிரபல கார் நிறுவனமான நிஸான், மற்றொரு புகழ்பெற்ற ரெனால்ட் நிறுவனத்துடன் இணைந்து சென்னையில் கார் உற்பத்தி தொழிற்சாலையை கடந்த 2008-ம் ஆண்டு ரூ. 6 ஆயிரத்து 100 கோடி முதலீட்டில் தொடங்கியது.
அப்போது செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமிழக அரசு சார்பில் ஊக்கத்தொகை மற்றும் வரிச்சலுகைகளை தருவதாக நிஸான் நிறுவனம் தெரிவித்தது.
ஆனால், ஒப்புக்கொண்டபடி ரூ.5 ஆயிரம் கோடி வரியை திரும்பித் தர தமிழக அரசு மறுப்பதாகவும் நிஸான் நிறுவனம் குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும் இதுதொடர்பாக ஏற்கனவே ரூ.2 ஆயிரத்து 900 கோடி பாக்கி வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
Advertisement
இதுதொடர்பாக மத்திய அரசிடம் பலமுறை முறையிட்டும் பலனில்லை என்பதால் தற்போது இந்திய அரசு மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாகவும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நிஸான் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.