தமிழ்நாடு

மாமல்லபுரத்தில் 11 அடி உயரத்துக்கு எழுந்த ராட்சத கடல் அலைகள்

DIN

மாமல்லபுரத்தில் வெள்ளிக்கிழமை கடல்சீற்றம் அதிகமாக இருந்தது. 11 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழுந்தன.
செங்கல்பட்டு, திருக்கழுகுன்றம், மாமல்லபுரம், கல்பாக்கம், திருப்போரூர், கோவளம், சிங்கப்பெருமாள் கோவில், மறைமலை நகர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும் விட்டுவிட்டு சுமாரான மழை பெய்தது. 
கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களை அச்சுறுத்தும் வகையில் வெள்ளிக்கிழமை காலை முதலே 11 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழுந்தன. 
கடல் அலைகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் வந்ததால் சிலர் வீடுகளுக்குள் இருக்க அஞ்சி வெளியேறி உறவினர்களின் வீடுகளுக்குச் சென்றனர். சிலர் வெளியே வராமல் வீட்டிற்குள்ளேயே முடங்கினர். 
மாமல்லபுரம், உய்யாளிகுப்பம், தேவனேரி, கொக்கிலிமேடு, வெண்புருஷம் குப்பம், சூளேரி காட்டுக்குப்பம், புதுகல்பாக்கம், சதுரங்கப்பட்டினம், கோவளம் உள்ளிட்ட கடலோரப் பகுதி மீனவர்கள் 15-வது நாளாக வெள்ளிக்கிழமையும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. 
மழைகாரணமாக மாமல்லபுரத்துக்கு சுற்றுலாப் பயணிகள் வரவில்லை. இதனால் வெறிச்சோடி காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீதானே பொன் வசந்தம்.. சமந்தா பிறந்தநாள்!

குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

வெங்கடேஷ் பட்டின் புதிய சமையல் நிகழ்ச்சி அறிவிப்பு!

ஐஸ்வர்யம்..!

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் ஏப்.30ல் மறு வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT