தமிழ்நாடு

கொடிநாள் நிதி: நன்கொடைகளை வாரி வழங்க முதல்வர் வேண்டுகோள்

DIN

படைவீரர் கொடிநாள் நிதி வசூலில் கடந்த 13 ஆண்டுகளாக தமிழகம் முன்னிலை வகித்து வரும் நிலையில், இந்த ஆண்டும் நன்கொடையை வாரி வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட கொடிநாள் செய்தி: 
முப்படை வீரர்களின் மகத்தான சேவையை நினைவு கூரும் வகையில், முப்படையினர் கொடி நாள் ஆண்டுதோறும் டிசம்பர் 7-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.
நாட்டுக்கு சேவை செய்ய இளம் ஆண், பெண்களை ராணுவத்துக்கு அனுப்பி வைக்கும் உன்னதமான மரபை தமிழகம் கொண்டுள்ளது. நமது இளைஞர்கள் மத்தியில் வீரத்தை விதைத்து, ராணுவத்தில் சேரும் இளைஞர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும். 
நாட்டைப் பாதுகாக்கச் செல்லும் வீரர்களின் குடும்பத்துக்குப் பாதுகாப்பு அளிப்பதும், போரில் மரணமடைந்த வீரர்களின் வாரிசுகள், குடும்பத்தினருக்கு உதவி செய்வதும், படைப் பணியிலிருந்து விடுவிக்கப்படும் ராணுவ வீரருக்கு மறுவேலைவாய்ப்பு அளிப்பதும் நம் அனைவரின் கடமை. இந்தப் பணிகளை மேற்கொள்ள தமிழ் மக்கள் அனைவரின் பங்களிப்பு மிகவும் அவசியம். 
முன்னாள் படைவீரர்கள், ஊனமுற்ற படைவீரர்கள், போர் விதவைகள் மற்றும் குடும்பத்தினருக்கு தமிழக அரசு முன்னாள் படைவீரர் நலத் துறை மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு நலத் திட்டங்களுக்காக, கொடி நாளில் திரட்டப்படும் நன்கொடைகள் முழுவதுமாகப் பயன்படுத்தப்படுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் கொடி நாள் வசூல் இலக்கைத் தாண்டி தமிழக மக்கள் நன்கொடை அளித்து வருகின்றனர். இந்திய அளவில் மக்கள் தொகை அடிப்படையில் கொடி நாள் நிதி வசூலில் தமிழகம் 13 ஆண்டுகளாக தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. அதுபோல, இந்த ஆண்டும் படைவீரர் கொடி நாள் நிதிக்கு நன்கொடையை வாரி வழங்கவேண்டும் எனத் முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமர் மோடிக்கு எதிரான புகார்: 1 வாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் பதிலளிக்கப்படும் -பாஜக

பிகாரில் கார்-லாரி மோதல்: 6 பேர் பலி!

கோவை தோ்தல் முடிவை வெளியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி

அதிகரித்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

வணங்கான் வெளியீட்டு பணிகள் தீவிரம்!

SCROLL FOR NEXT