தமிழ்நாடு

அன்புமணி மீதான தேர்தல் விதிமீறல் வழக்கு: விசாரணைக்கு இடைக்காலத் தடை

DIN

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மீதான தேர்தல் விதி மீறல் தொடர்பான வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உ யர் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. 
கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட அன்புமணி வெற்றி பெற்றார். "தேர்தல் பிரசாரத்தின்போது பாமகவைச் சேர்ந்த தொண்டர்கள், தம்மை பணி செய்யவிடாமல் தடுத்ததுடன், தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தனர்' என தேர்தல் அதிகாரியும், வட்டாட்சியருமான குணசேகரன், தருமபுரி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் அன்புமணி மீது, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், "அரசியல் உள்நோக்கத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில் தன் மீதான புகாருக்கு எந்த ஆதாரமும் இல்லை; எனவே இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்' என அன்புமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். 
இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அன்புமணி மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து, இந்த வழக்கின் விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

SCROLL FOR NEXT