தமிழ்நாடு

குமரி மீனவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக நொச்சிக்குப்பம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

DIN


சென்னை: கன்னியாகுமரி மீனவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக சென்னை நொச்சிக்குப்பத்தில் ஏராளமான மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒக்கி புயல் காரணமாக காணாமல் போன மீனவர்களைத் தேடும் பணியில் மத்திய, மாநில அரசுகள் மெத்தனமாக செயல்பட்டதாகவும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் சென்ற நிலையில், வெறும் 86 மீனவர்கள் மட்டும் மாயமானதாக தமிழக அரசு கூறிவருவதை எதிர்த்தும், கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் நேற்று போராட்டத்தில் குதித்தனர்.

8 மீனவ கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பேரணியாக வந்து குழித்துறை ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். நேற்று இரவு வரை நீடித்த இந்த தர்ணா போராட்டம், மீனவர்கள் முதல்வரை சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் என்று அளிக்கப்பட்ட உறுதி மொழியை ஏற்று, தாற்காலிகமாக கைவிடப்பட்டது.

இந்த நிலையில், கன்னியாகுமரி மீனவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சென்னை நொச்சிக்குப்பத்தில் உள்ள மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களை காவல்துறையினர், பேருந்துகள் மூலம் சேப்பாக்கம் பகுதிக்கு அழைத்துச் சென்றனர். 

அதே சமயத்தில், கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலிலும் ஏராளமான மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT