தமிழ்நாடு

மீனவர்கள் போராட்டத்தில் அரசியல் புகுந்து விடக்கூடாது: மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்

DIN

மீனவர்கள் போராட்டத்தில் அரசியல் புகுந்து விடக்கூடாது என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஒக்கி புயலின்போது மாயமான மீனவர்களை மீட்கக்கோரி கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாள்களாக போராட்டங்கள் வலுத்து வருகின்றன. குளித்துறை ரயில் நிலையத்தில் மீனவர்கள் வியாழக்கிழமை 8 மணி நேரத்திற்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஏராளமான பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். மீனவர்களின் போராட்டம் கன்னியாகுமரியில் இன்றும் நீடித்து வருகிறது. 

இந்நிலையில் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், 
கன்னியாகுமரி மாவட்டத்தில் புயல் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தேன். தடிக்காரன்கோணம், பேச்சிப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வாழைமரங்கள், ரப்பர் தோட்டங்களும், விவசாய பயிர்களும் சேதம் அடைந்துள்ளன. புயலில் மாயமான 2,641 மீனவர்கள் மீட்கப்பட்டு வெளிமாநிலங்களில் தங்கியுள்ளனர். அவர்களை மீட்டு வரவும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டு உள்ளது. 

குமரி மாவட்டத்தில் நடந்த மீனவர் போராட்டம் அவர்களின் வேதனை மற்றும் சோகத்தின் வெளிப்பாடு. அந்த போராட்டத்தில் அரசியல் புகுந்து விடக்கூடாது. அரசியல்வாதிகள் இணைந்து பணியாற்ற வேண்டுமே தவிர அரசியலாக்கி குளிர் காயக்கூடாது. மாயமான மீனவர்களை மீட்பதில் மத்திய, மாநில அரசுகள் சரியாக செயல்படவில்லை என பொய்யான தோற்றம் பரப்பப்படுகிறது. புயல் பாதிப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நேரில் வந்து ஆய்வு செய்ய வேண்டும். மேலும் புயலால் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு குறைந்தது ரூ.1 லட்சம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT