தமிழ்நாடு

தென் தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு

DIN

குமரிக்கடல் பகுதியில் வளிமண்டலத்தின் மேலடுக்கில் சுழற்சி நீடிப்பதால், தென் தமிழகத்தில் சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியது: 
குமரிக்கடல் பகுதியில் வளி மண்டலத்தில் மேலடுக்கில் சுழற்சி கடந்த 4 நாள்களாக நீடிக்கிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைப் பெய்து வந்தது. அந்த மேலடுக்கு சுழற்சி தொடர்ந்து அதே இடத்தில் நீடிப்பதால், தென் தமிழகத்தில் சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வடதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழைப் பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். அதிகாலையில் மூடுபனி காணப்படும் என்றார் .
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரணமடைந்த ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் சொல்லியிருப்பது..: கே.வி. தங்கபாலு விளக்கம்

ரோஜா பூ..!

ஸீரோ பேலன்ஸ்: சத்தீஸ்கர் பழங்குடிப் பெண் வேட்பாளர்

தேர்தலில் வடகிழக்கு மாநிலங்கள் முக்கியப் பங்காற்றும்: அசாம் முதல்வர்

அழுத்தமான சூழலில் சரியான முடிவுகளை எடுப்பவர் ரோஹித் சர்மா: யுவராஜ் சிங்

SCROLL FOR NEXT