தமிழ்நாடு

நேபாள நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ஆதார் அட்டை: மூவர் கைது

DIN

சென்னையில் நேபாள நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ஆதார் அட்டை தயாரித்து அளித்தாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவான்மியூர் புதிய கடற்கரை பகுதியில் போலீஸார் திங்கள்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்றுக் கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தபோது, கொசப்பேட்டையைச் அருண் (25) பட்டாளம் கே.எம். கார்டன் பகுதியைச் சேர்ந்த மோ.பாலமுருகன் (26), வேப்பேரி புரசைவாக்கம் நெடுஞ்சாலைப் பகுதியைச் சேர்ந்த நிம்பகதூர் கத்ரி (24) என தெரியவந்தது. இவர்கள் மூவரும் போலியான ஆவணங்கள் மூலம் ஆதார் அட்டை தயாரித்து நேபாள நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ரூ.1,500-க்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. 
ஆதார் அட்டை தயாரித்து கொடுக்கும் ஒரு தனியார் ஒப்பந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் அருண், பாலமுருகன் ஆகியோரிடம் நேபாளத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஆதார் அட்டை பெற்றுத் தர அணுகியதாகவும், இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அவர்கள் இருவரும், 85-க்கும் மேற்பட்டோருக்கு போலியான ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு ஆதார் அட்டைகளை தயாரித்து வழங்கியிருப்பதும் தெரியவந்தது. அதையடுத்து மூவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஆதார் அட்டை தயாரிக்க பயன்படுத்தப்படும் இயந்திரமும் பறிமுதல் செய்யப்பட்டது.
இவ்வழக்கின் அடுத்தக் கட்டமாக போலி ஆவணங்கள் மூலம் ஆதார் அட்டை பெற்றவர்களின் தகவல்களை போலீஸார் சேகரித்து வருகின்றனர். விரைவில் அவர்களும் வழக்கில் சேர்க்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

SCROLL FOR NEXT