தமிழ்நாடு

மருத்துவ மாணவர்கள் போராட்டம் வாபஸ்

DIN

முதுநிலை மருத்துவர் பணியிடங்களுக்கான கலந்தாய்வை ரத்து செய்யக் கோரி, சென்னையில் நடைபெற்று வந்த மருத்துவ மாணவர்கள் போராட்டம் திங்கள்கிழமை இரவு வாபஸ் பெறப்பட்டது.
அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள முதுநிலை மருத்துவர் காலிப் பணியிடங்களுக்கான கலந்தாய்வு நவம்பர் 17, 18 தேதிகளில் நடைபெற்றது. இதில், தங்களுக்கு முன்னுரிமை அளிக்கக் கோரி, அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுகலை மருத்துவம் படிக்கும் மாணவர்கள் நவம்பர் 20-ஆம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 
இந்நிலையில், ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் மருத்துவ மாணவர் பிரதிநிதிகளுடன் திங்கள்கிழமை இரவு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், தங்களின் பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்கப்பட்டதால் போராட்டத்தைக் கைவிடுவதாக மருத்துவ மாணவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:-
எங்களின் கோரிக்கை குறித்து எழுத்துப்பூர்வமாக உறுதிமொழி கேட்டிருந்தோம். ஆனால், நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவதால் எழுத்துப்பூர்வமாக உறுதிமொழி எதையும் கொடுக்க முடியாது என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும், எங்களின் பெரும்பாலான கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதாக சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் உறுதியளித்தார். இதையேற்று போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளோம் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலங்கடிக்கும் வெடிகுண்டு மிரட்டல்: எங்கிருந்து வருகிறது மின்னஞ்சல்?

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

SCROLL FOR NEXT