தமிழ்நாடு

குமரி மலைவாழ் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம்: தமிழக அரசு

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ. 5 ஆயிரம் நிவாரண நிதி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
ஒக்கி புயலால் கன்னியாகுமரி மாவட்டம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அங்கு போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் கன்னியாகுமரி மாவட்டம் இயல்பு நிலைக்குத் திரும்பியது.
உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அந்த மாவட்டத்தில் திருவட்டாறு, பேச்சிப்பாறை, தோவாளை, தடிக்காரன்கோணம் ஆகிய ஊராட்சிகள், கடையால், பொன்மனை ஆகிய பேரூராட்சிகளில் 1524 மலைவாழ் குடும்பங்கள் ஒக்கி புயலால் தொழில் செய்ய முடியாத நிலையில் உள்ளன. அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அதனையேற்று, மலைவாழ் மக்களுக்கு வாழ்வாதார நிவாரணத் தொகையாக குடும்பத்துக்கு தலா ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT