சென்னை: உடல் நலக்குறைவின் காரணமாக ஓய்வில் இருக்கும் திமுக தலைவர் கருணாநிதி நீண்ட இடைவேளைக்குப் பிறகு வெள்ளி இரவு 9 மணியளவில் அறிவாலயத்திற்கு வருகை தந்தார்.
திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவின் காரணமாக தொடர் ஓய்வில் இருக்கிறார். நடுவில் முரசொலி பவழ விழா சமயத்தில் அவர் முரசொலி அலுவலகத்திற்கு வருகை தந்தார்.
அதன்பிறகு வெள்ளி இரவு 9 மணியளவில் அறிவாலயத்திற்கு வருகை தந்தார்.அவருடன் திமுக செயல் தலைவர் ஸ்டாலின், துணை பொதுச் செயலாளர் துரைமுருகன் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ராசா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
சில நிமிடங்கள் அங்கு தங்கியிருந்த அவரிடம் அறிவாலய ஊழியர்கள் ஆசி பெற்றனர்.
பின்னர் அங்கிருந்துஅவர் தனது கோபாலபுரம் இல்லத்திற்கு புறப்பட்டுச் சென்றார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.