தமிழ்நாடு

பொலிவுறு நகரங்கள் திட்டம்: புதுவைக்கு ரூ. 98 கோடி ஒதுக்கீடு

DIN

பொலிவுறு நகரம் திட்டத்தின்கீழ், புதுவைக்கு முதல்கட்டமாக ரூ. 98 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதையடுத்து, இத்திட்ட பணிகள் தீவிரமடைந்துள்ளன.
மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் பொலிவுறு நகரங்கள் திட்டப் பட்டியலில் புதுச்சேரியும் இடம் பெற்றுள்ளது. இதற்காக ரூ. 1,850 கோடியில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன
பொலிவுறு நகரில் மொத்தம் 63 தனித் தனித் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. 
இந்த நிலையில், பொலிவுறு நகரப் பணிகளுக்காக மத்திய அரசு முதல்கட்டமாக வழங்க வேண்டிய ரூ. 200 கோடியில் ரூ. 98 கோடியை வழங்கியுள்ளது. 
இதுகுறித்து பொலிவுறு நகரத் திட்ட அதிகாரியும், உள்ளாட்சிச் செயலருமான ஜவகர் கூறியதாவது: தூய்மை வீதி மற்றும் ரோமன்ட் ரோலன்ட் வீதிகளில் தனியாக மிதிவண்டிப் பாதை மற்றும் அழகான நடைபாதைகள் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும். 
இதற்கான திட்டவரையறை தயாரிக்கப்பட்டு, 3 மாத காலத்தில் பணிகள் நிறைவு பெறும் என எதிர்பார்க்கிறோம். பொலிவுறு நகரம் திட்டத்தைப் பொறுத்தவரை திட்டங்கள், தொகை ஒதுக்குவது தொடர்பாக, இதற்காக அமைக்கப்பட்ட வாரியம்தான் முடிவு செய்யும் என்றார் அவர். 
கடற்கரை செயற்கை மணல் பரப்புத் திட்டம்: இதனிடையே, புதுச்சேரி கடற்கரையில் செயற்கை மணல் பரப்பை உருவாக்கும் திட்டம் மார்ச் மாதம் நிறைவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். செயற்கை மணல் பரப்பை உருவாக்க, மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகமும், தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனமும் இணைந்து, ரூ. 25 கோடியில் திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றன. தலைமைச் செயலகம் எதிரே கடலில் கூம்பு வடிவிலான அமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக, கடலில் 200 மீட்டர் நீளத்துக்கு கருங்கற்கள் கொட்டப்பட்டு இடம் சமன் செய்யப்பட்டது. இதையடுத்து, கான்கிரீட் கட்டைகள் தயாரிக்கப்பட்டு பதிக்கப்பட்டன. இரண்டாம் கட்டமாக கடலில் 50 மீட்டர் தொலைவில், தண்ணீரில் மூழ்கக் கூடிய இரண்டு தடுப்புச் சுவர்களை உருவாக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 
இதற்காக, அலையின் வேகத்தைக் குறைக்கும் வகையில், கய்சன் ரீப்கள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நீரில் மூழ்கக்கூடிய ஒவ்வொரு ரீப்புகளும் 125 மீட்டர் நீளத்திலும், 100 மீட்டர் அகலத்திலும் அமைய உள்ளன.
இந்தப் பணிகள் வருகிற மார்ச் மாதத்துக்குள் நிறைவடைந்து விடும். அதன் பின்னர், ஓராண்டுக்குள் தலைமைச் செயலகம் எதிரே, இயற்கையாகவே மணல் பரப்பு உருவாகிவிடும் என இந்தப் பணியை மேற்கொண்டுள்ள புவி அறிவியல் அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

SCROLL FOR NEXT