தமிழ்நாடு

மக்களின் நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்வார்: ராகுல் காந்திக்கு, மு.க. ஸ்டாலின் வாழ்த்து

DIN

காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுள்ள ராகுல் காந்திக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் 87ஆவது தலைவராக ராகுல் காந்தி இன்று முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். தில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, மூத்த காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்துகொண்டனர். இதையடுத்து ராகுல் காந்திக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

இதுகுறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில், 
இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு திமுக சார்பில் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மக்களின் நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்வார் என்றும் மதச்சார்பின்மை, சோஷியலிசம் மற்றும் கூட்டாட்சி ஆகியவற்றின் பெருமைகளை மீட்டெடுப்பார் என்றும் நம்புகிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT