தமிழ்நாடு

மலேசிய மணல் ஏற்றிச் சென்ற 2 லாரிகள் பறிமுதல்

DIN

தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து மலேசியாவில் இருந்து இறக்குமதியான மணலை ஏற்றிச் சென்ற 2 லாரிகளை வருவாய்த் துறை அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
புதுக்கோட்டையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று மலேசியாவிலிருந்து மணலை இறக்குமதி செய்தது. மணலை தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து வெளியே கொண்டுசெல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இதையடுத்து, தனியார் நிறுவனம் நீதிமன்றத்தை நாடிய நிலையில், மணலை கொண்டு செல்ல நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக அரசுத் தரப்பில் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. 
இந்நிலையில், தூத்துக்குடி வட்டாட்சியர் ராமசந்திரன் தலைமையில் வருவாய்த் துறை அதிகாரிகள் சனிக்கிழமை துறைமுகப் புறவழிச் சாலையில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது துறைமுகத்திலிருந்து சென்ற 2 லாரிகளை நிறுத்தி சோதனையிட்டனர். 
அதில், ஒரு டாரஸ் லாரியில் 25 டன்னும், மற்றொரு லாரியில் 12 டன்னும் மணல் இருந்ததும், அது மலேசியாவிலிருந்து இறக்குமதியான மணல் என்பதும் தெரிய வந்தது. 2 லாரிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து, தெர்மல் நகர் காவல் நிலையத்துக்கு கொண்டு செல்ல உத்தரவிட்டனர்.
மலேசிய மணல் தொடர்பாக தமிழக அரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதால், மலேசிய மணலை லாரிகளில் கொண்டு செல்ல அனுமதியில்லை என, லாரி ஓட்டுநர்களிடம் அதிகாரிகள் தெரிவித்தனராம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

SCROLL FOR NEXT