தமிழ்நாடு

கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை

DIN

கிழக்கு திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக, கடலோர தமிழகத்தின் ஒரு சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் வியாழக்கிழமை தெரிவித்தார்.
ஈரப்பதம் மிகுந்த கிழக்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு காணப்படுகிறது. இதன் காரணமாக, கடலோர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 
உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டமாக காணப்படும் என்றார் அவர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வியாழக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில், திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்தில் 30 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. காரைக்காலில் 20 மி.மீ., நாகையில் 10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT