தமிழ்நாடு

ஜனவரியில் முன்னாள் ராணுவத்தினருக்கு குரூப் 4 தேர்வு  இலவச பயிற்சி வகுப்பு

DIN

சென்னை,  தி. நகரில் உள்ள இந்திய இளைஞர்  சங்கம்,  முன்னாள் ராணுவத்தினர்,  மாற்றுத் திறனாளிகள்,  ஆதரவற்ற விதவைகளுக்கு குரூப் 4 தேர்வுக்கான இலவச  பயிற்சி வகுப்புகளை ஜனவரி முதல் நடத்தவுள்ளது.
தமிழ்நாடு பொதுப்பணி தேர்வாணையம் 9,351 எழுத்தர்கள் மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள் பதவிக்கு தேர்வு அறிவித்துள்ளது.   இதற்கான எழுத்துத் தேர்வு வரும் ஆண்டு பிப்ரவரி 11 அன்று நடத்தப்படுகிறது.  அதையடுத்து தன்னார்வ தொண்டு நிறுவனமான இந்திய இளைஞர் சங்கம், இத்தேர்வு எழுதவுள்ள முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற விதவைகளுக்கு இலவச வகுப்பு நடத்தவுள்ளது.
இந்த பயிற்சி வகுப்புகள் 2018 ஜனவரி 1-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 7-ஆம் தேதி வரை நடைபெறும். இதில்  கணிதம், மொழித்திறன் மற்றும் பொது அறிவு கற்பிக்கப்படும். தினமும்  காலை 7 முதல் 9 மணி வரையிலும்,  காலை 10 முதல் 12 மணி வரையிலும்,  மாலை 6 முதல் 8 மணி வரையிலும்  என  மூன்று  காலங்களாக இந்த வகுப்பு நடைபெறும். இதில் பயிற்சி பெறுவோர் ஏதாவது ஒரு நேரத்தை தேர்வு செய்யலாம்.  ஆர்வமுள்ள  விண்ணப்பதாரர்கள் தங்கள் பெயர்களை 2018 ஜனவரி 1-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.  மேலும் விவரங்களுக்கு  044-24358560,  9384844405 என்ற தொலைபேசிகளில்  தொடர்புக் கொள்ளலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என் பார்வை உன்னோடு..

சந்தேஷ்காளியில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதற்கான ஆதாரம் இல்லை: மம்தா

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

SCROLL FOR NEXT