தமிழ்நாடு

கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு

DIN

கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி, வலைகளை சேதப்படுத்தி விரட்டியடித்துள்ளனர். 
ராமேசுவரத்தில் இருந்து புதன்கிழமை 500-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 2500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். வியாழக்கிழமை அதிகாலையில் கச்சத்தீவுக்கு அருகே அவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். 
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி மீன்பிடிக்கவிடாமல் விரட்டியடித்துள்ளனர். 
மேலும் 50-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இருந்த வலைகளை அறுத்து கடலில் எறிந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் வியாழக்கிழமை கரை திரும்பினர். படகுக்கு தலா ரூ.50 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

SCROLL FOR NEXT