தமிழ்நாடு

வல்லூர் அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு 

தினமணி

தொழில்நுட்ப கோளாறு காரணாமாக வல்லூர் அனல் மின்நிலையத்தின் இரண்டாவது மின் அலகு பிரிவில் 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

தேசிய அனல் மின் கழகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமும் இணைந்து கூட்டு நடவடிக்கையாக, திருவள்ளூர் மாவட்டம், வல்லூரில் அனல் மின்நிலையம் நிறுவப்பட்டு, மூன்று அலகுகளில் தலா 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணாமாக வல்லூர் அனல் மின்நிலையத்தின் இரண்டாவது மின் அலகு பிரிவில் 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது இதனை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். நிலைமை சீரடைந்தவுடன் வழக்கம்போல் மின் உற்பத்தி தொடங்கும் என்று மின்நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

வல்லூர் அனல் மின்நிலையத்தின் மொத்த மின் உற்பத்தி திறனான 1500 மெகாவாட் மின் உற்பத்தியில், தற்போது 2-வது மின் அலகில் 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. தற்போது முதல் மற்றும் மூன்று அலகில் மட்டுமே 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT