தமிழ்நாடு

அண்ணா நினைவு தினம்: நினைவிடத்தில் சசிகலா மலர் தூவி அஞ்சலி!

இன்று முன்னாள் முதலமைச்சர் அண்ணா நினைவு தினத்தையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

DIN

சென்னை இன்று முன்னாள் முதலமைச்சர் அண்ணா நினைவு தினத்தையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

இன்று தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா இன்று மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

காலை 10 மணியளவில் சசிகலா அண்ணா நினைவிடத்துக்கு வந்த சசிகலா, அண்ணா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் நினைவிடத்தில் கூடியிருந்த அதிமுக தொண்டர்களை பார்த்து கை கூப்பி வணங்கினார் . பின்னர் அங்கிருந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று அங்கேயும் மரியாதை செலுத்தினார். அத்துடன் எம்.ஜி.ஆர் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தி விட்டு அவர் புறப்பட்டுச் சென்றார்.

அவருடன் இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் தமிழக முதல்வர்  ஓ. பன்னீர்செலவம், அவைத் தலைவர் மதுசூதனன், பொன்னையன், கே.ஏ. செங்கோட்டையன், பா. வளர்மதி, தமிழ்மகன் உசேன், பண்ருட்டி ராமச்சந்திரன், தம்பித்துரை, மாநில அமைச்சர்கள் மற்றும்காட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

600 பேருக்கு வேலைவாய்ப்பு! வேலூரில் மினி டைடல் பூங்கா திறப்பு!

ஆஷஸ் தொடருக்கான ஆஸி. அணி அறிவிப்பு! கேப்டனாக ஸ்மித்.. மீண்டும் மார்னஸ் லபுஷேனுக்கு வாய்ப்பு!

பிக் பாஸ் 9 நேரலையும் எடிட் செய்யப்படுகிறதா?

பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜேன் ஏஜேபி கட்சியில் இணைந்தார்!

வேல் இருந்தால், ஒளியுண்டு... சாக்‌ஷி அகர்வால்!

SCROLL FOR NEXT