தமிழ்நாடு

தனியார் வானொலிகளும் செய்திகளை ஒலிபரப்பும் காலம் வரும்: ப. சிதம்பரம்

DIN

அலைவரிசை அரசுக்கு மட்டும் சொந்தமானது என்றில்லாமல், தனியார் வானொலிகளும் செய்திகளை ஒலிபரப்பும் காலம் விரைவில் வரும் என, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.
ராமேசுவரம் தீவு பாம்பனில் நேசக்கரங்கள் அறக்கட்டளை சார்பில் மீனவர்களின் நலனுக்காக "கடல் ஓசை' என்னும் சமுதாய வானொலி நிலையத்தை சிதம்பரம் சனிக்கிழமை குத்துவிளக்கேற்றி திறந்துவைத்து பேசியதாவது:
அகில இந்திய வானொலி மட்டுமே செய்திகளை ஒலிபரப்ப வேண்டும் என்ற விதி உள்ளது. இது ஒரு பழமையான விதியாகும்.
அலைவரிசை அரசுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. அது மக்களுக்கும் சொந்தமானது என்று ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. அலைவரிசைகளை வகைப்படுத்தக்கூடிய அதிகாரம் மட்டுமே அரசுக்கு உள்ளது. எனவே, தனியார் வானொலிகளும் செய்திகளை ஒலிபரப்பலாம் என்ற வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆதலால் தனியார் வானொலிகளும் செய்திகளை ஒலிபரப்பும் காலம் விரைவில் வரும். நாட்டில் முதன்முதலாக பாம்பனில் இந்த எஃப்.எம். வானொலி நிலையம் திறக்கப்பட்டு, 24 மணி நேர சேவை செய்ய முன்வந்திருப்பது பாராட்டுக்குரியது
என்றார்.
விழாவில், வானொலி நி லைய இயக்குநர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ சிறிய அளவிலான பாய்மரக்கப்பல் ஒன்றை ப. சிதம்பரத்துக்கு நினைவுப் பரிசாக வழங்கினார்.
கார்த்தி ப. சிதம்பரம், இலங்கை வானொலி நிலைய அறிவிப்பாளர் பி.ஹெச். அப்துல்ஹமீத், தமிழ்ப் பேராசிரியர் கு. ஞானசம்பந்தன், முனைவர் ரா. குறிஞ்சிவேந்தன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT