தமிழ்நாடு

பன்றிக் காய்ச்சலை தடுக்க நடவடிக்கை தேவை

DIN

பன்றிக் காய்ச்சலைத் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர், சென்னையில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை மேலும் கூறியதாவது:
தமிழகத்துக்கு வரும் நதி நீரைத் தடுக்கும் வகையில் ஆந்திரமும், கேரளமும் தொடர்ந்து தடுப்பணைகளைக் கட்டி வருகின்றன. இதனைத் தடுக்கும் நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.
இலங்கைச் சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 25 பேரையும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள 123 படகுகளையும் மீட்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும்.
எண்ணூர் கடல் பகுதியில் எண்ணெய் பரவியுள்ளதால் மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மத்திய பாஜக அரசு மக்கள் எதிர்பார்த்த அளவுக்குச் செயல்படவில்லை என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

SCROLL FOR NEXT