தமிழ்நாடு

பிப். 7-இல் மார்க்சிஸ்ட் மறியல்

DIN

மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து பிப்ரவரி 7-இல் போராட்டம் நடைபெறும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.
சென்னையில் அவர் சனிக்கிழமை அளித்த பேட்டி:-
தமிழகத்தில் வறட்சியின் காரணமாக உயிரிழந்த அனைத்து விவசாயிகளுக்கும் தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். ஜல்லிக்கட்டுக்காக அமைதியாக நடந்த போராட்டத்தைச் சுமுகமாக முடிக்க வழியிருந்தும் தமிழக அரசு முடிக்கவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது காவல் துறையில் வன்முறை தாக்குதல் தொடுத்தனர். இந்த விவகாரத்தை மத்திய அரசு கண்டுகொள்ளவே இல்லை.
ஜல்லிக்கட்டு வன்முறை தொடர்பாக தமிழக அரசு அறிவித்துள்ள நீதி விசாரணை உயர்நீதிமன்ற கண்காணிப்பில் நடைபெற வேண்டும். சிறையில் அடைக்கப்பட்டோரை நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட வேண்டும்
மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை எதிர்பார்த்ததைப் போலவே சாதாரண மக்களுக்கு வஞ்சகம் செய்வதாகவும், செல்வந்தர்களுக்கு சாதகமாகவும் அமைந்துள்ளது. சிறு குறு தொழில்முனைவோருக்கு எவ்விதச் சலுகையும் இல்லை. ரயில்வே துறையில் தனியார் மயம் ஊக்குவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டிக்கும் வகையில் பிப்ரவரி 7-இல் மாநிலம் தழுவிய அளவில் மறியல் போராட்டம் நடைபெறும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT