தமிழ்நாடு

திருக்குறள் ஆய்வு கட்டுரைப் போட்டி

DIN

திருக்குறள் ஆய்வுக் கட்டுரைப் போட்டியில் பங்கேற்க விரும்புவோர் மார்ச் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து, வள்ளுவத் தமிழ் உதய முரசக அறக்கட்டளை ஆலோசகர் சி.சண்முகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: வள்ளுவத்துக்குள் புதைந்துள்ள இதுவரை வார்க்கப்படாத வாழ்வியல் விழுமியங்களை வெளிக்கொண்டு வரும் நோக்குடன் வள்ளுவத் தமிழ் உதய முரசக அறக்கட்டளை சார்பில் திருக்குறள் ஆய்வுக் கட்டுரைப் போட்டி முப்பாலின் முன்னுரை (பாயிரம்) எனும் தலைப்பில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் பங்கேற்க விரும்புவோர் தங்களது கட்டுரைகளை 10 பக்கங்களுக்கு மிகாமல் அனுப்ப வேண்டும். கட்டுரையின் இரு நகல்களுடன் தொடர்பு முகவரி, தொலைபேசி எண், பாஸ்போர்ட் அளவு புகைப்படமும் இணைத்து வள்ளுவத் தமிழ் உதய முரசக அறக்கட்டளை, 71/3 கோவலன் இரண்டாவது வீதி, ஆசிரியர் குடியிருப்பு, ஈரோடு - 638001 (செல்லிடப்பேசி: 94430-27280) என்ற முகவரிக்கு மார்ச் 15-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரைக்கு அரை பவுன் தங்கக் காசு பரிசாக வழங்கப்படும். சிறந்த கட்டுரைகளை சமர்ப்பித்தவர்களின் கலந்துரையாடல் நிகழ்வு கருத்தரங்கில் நடைபெறும். கருத்தரங்கு நடைபெறும் இடம், தேதி பின்னர் அறிவிக்கப்படும். தேர்வு பெறும் சிறந்த கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூலாகவும் வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT