தமிழ்நாடு

மர்ம காய்ச்சல்: தஞ்சை அருகே மேலும் ஒரு பெண் சாவு

DIN

தஞ்சாவூர் மாவட்டத்தில், மர்ம காய்ச்சலால் மேலும் ஒரு பெண் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார்.
தமிழகத்தில், பன்றிக் காய்ச்சலால் அதிக அளவில் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பட்டுக்கோட்டை அருகேயுள்ள அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த அ. நாகராஜன் (59) தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அண்மையில் உயிரிழந்தார்.
இதே மருத்துவமனையில் மர்ம காய்ச்சல் காரணமாக சேர்க்கப்பட்ட கும்பகோணம் செட்டிமண்டபத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (54) திங்கள்கிழமை இறந்தார்.
இதைத் தொடர்ந்து, பட்டுக்கோட்டை அருகே பள்ளத்தூர் பெரியார் நகரைச் சேர்ந்த மலர்ராஜன் மனைவி கவிதா (45) தொடர் காய்ச்சலால் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அண்மையில் சேர்க்கப்பட்டார். இவர் திங்கள்கிழமை நள்ளிரவு உயிரிழந்தார்.
பாலகிருஷ்ணன், கவிதாவின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதன் முடிவுகள் வந்தபிறகே அது எந்த வகையான காய்ச்சல் என்பது தெரியவரும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

அதே அரண்மனை! நம்பர் மட்டும் வேறு! : அரண்மனை - 4 திரைவிமர்சனம்!

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

SCROLL FOR NEXT