தமிழ்நாடு

ரயிலின் மேற்கூரையில் மின்சாரம் தாக்கி சிகிச்சை பெற்று வந்தவர் பலி

DIN

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மின்சாரம் தாக்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், செவ்வாய்க்கிழமை (பிப்.7) உயிரிழந்தார்.
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்றும், பீட்டா அமைப்பைத் தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி, சேலத்தில் ஜனவரி 18-ஆம் தேதி முதல் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, ஜனவரி 19-ஆம் தேதி பெங்களூரில் இருந்து காரைக்கால் செல்லும் ரயிலை மறித்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர். சேலம் அரசு மருத்துவமனை முன் உள்ள தண்டவாளத்தில் திடீரென ஒன்று திரண்ட ஆயிரக்கணக்கான மாணவர்கள், ரயிலை நிறுத்தி ரயிலின் மேற்கூரையின் மேல் ஏறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், ரயிலின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட சேலம், மன்னார்பாளையம், சத்தியா நகரைச் சேர்ந்த ராஜா மகன் யோகேஷ்வரன் (17) மின்சாரம் தாக்கியதில், உடல் முழுவதும் கருகியது.
இதையடுத்து, சக மாணவர்கள் அவரை உடனடியாக அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சென்னை மருத்துவக் குழுவினர் உள்ளிட்ட பல்வேறு குழுவினர் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்த நிலையில், கடந்த 19 நாள்களாக சிகிச்சை பெற்றுவந்த யோகேஷ்வரன் செவ்வாய்க்கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, யோகேஷ்வரனின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.
இதையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து, அவரது உடல் ஜான்சன்பேட்டையில் உள்ள மின் மயானத்தில் எரியூட்டப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக, சேலம் செவ்வாய்ப்பேட்டை போலீஸாரும், ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாரும் இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சேலம் அரசு மருத்துவமனை மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

SCROLL FOR NEXT