முகப்பு
தமிழ்நாடு

மனசாட்சி சொல்வதை பின்பற்றும் முதல்வர் - டிவிட்டரில் கவுதமி பாராட்டு 

தனது மனசாட்சி சொல்வதை பின்பற்றும் தைரியம் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு இருக்கிறது என்று நடிகை கவுதமி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

Updated On : 8 பிப்ரவரி, 2017 at 3:49 PM
பகிர்:

சென்னை: தனது மனசாட்சி சொல்வதை பின்பற்றும் தைரியம் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு இருக்கிறது என்று நடிகை கவுதமி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில்கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சரான பன்னீர்செல்வம் நேற்றிரவு அதிமுக பொதுச்செயலாளரான சசிகலாவுக்கு எதிராக கருத்து தெரிவித்து பேட்டியலித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தமிழக அரசியல் களம் சூடு பிடித்தது.

இந்நிலையில் நேற்றிரவு முதல்வரின் அதிரடிப் பேச்சைத் தொடர்ந்து "இதனால் தான் அம்மா ஓபிஎஸ்ஸை தேர்ந்தெடுத்தார். தனது மனசாட்சி சொல்வதை பின்பற்றும் தைரியம் பன்னீர்செல்வத்திற்கு இருக்கிறது. இது தமிழ்நாட்டுக்கான நீதி. அம்மாவுக்கான நீதி" என்று நடிகை கவுதமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

Advertisement

முன்னதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்த பொழுது அவரது மரணத்தில் நிலவும் சந்தேகங்கள் குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். தற்பொழுது பிரதமர் அலுவலக் டிவிட்டர் கணக்கை 'டேக்' செய்து 'பிரதமர் நரேந்திரமோடி தனக்கு அனுப்பப்படும் பொதுமக்களின் ட்வீட்டுகளுக்கு பதில் சொல்கிறார். ஏன் அம்மாவுக்கான நீதி வேண்டும் எனும்போது பதிலளிக்கவில்லை. தமிழகத்துக்கான நீதி என்பது அவ்வளவு முக்கியம் இல்லையா?" என்றும் நடிகை கவுதமி கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.