தமிழ்நாடு

ஏடிஎம்-களில் பணம் நிரப்புவதில் ரூ.51 லட்சம் மோசடி: 2 பேர் கைது

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏடிஎம் இயந்திரங்களில் பணத்தை நிரப்பாமல் ரூ.51 லட்சத்தை திருடியதாக, தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த 2 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னையை தலைமையிடமாகக் கொண்ட தனியார் நிறுவனம், புதுச்சேரி மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 80-க்கும் மேற்பட்ட ஏடிஎம் இயந்திரங்களில் பணத்தை நிரப்பும் பணியை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிறுவன ஊழியர்களான விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த பனமலைப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த தட்சணாமூர்த்தி மகன் பிரபு (30), ஜெகந்நாதன் மகன் கதிரவன் (34) ஆகிய இருவரும் திருக்கோவிலூர், மேல்மலையனூர், மணலூர்பேட்டை, அவலூர்பேட்டை, திண்டிவனம், வீடுர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏடிஎம் இயந்திரங்களில் பணம் நிரப்பும் பணி செய்து வந்தனர்.
இந்த நிலையில், இந்நிறுவனம் சார்பில் ஏடிஎம்களில் பணம் நிரப்புவது தொடர்பான கடந்த வாரம் நடைபெற்ற தணிக்கையில், கடந்த மாதத்தில் நிரப்பப்பட்ட பணத்தில் ரூ.51 லட்சத்து 34 ஆயிரத்து 900 மோசடி நடந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரி பிரபு, விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.
இதையடுத்து டிஎஸ்பி கோமதி உத்தரவின்பேரில் காவல் ஆய்வாளர்கள் சுப்பையா, சுந்தரேசன் தலைமையிலான போலீஸார் விசாரணை மேற்கொண்டதில் பிரபு, கதிரவன் ஆகிய இருவரும் 8 ஏடிஎம் மையங்களில் நிரப்ப வேண்டிய பணம் ரூ.51,34,900-ஐ மோசடி செய்து திருடியது தெரிய வந்தது.
இதையடுத்து, அவர்கள் இருவரையும் போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். திருடிய பணத்தை எந்த வகையில் முதலீடு செய்துள்ளனர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

75 வயது முதியவா் மீண்டும் பிரதமராக வேண்டுமா? லாலு மகள் மிசா பாரதி பிரசாரம்

வரத்துக் குறைவால் பூண்டு விலை அதிகரிப்பு!

தூத்துக்குடியில் தீத்தடுப்பு, தொழிற்சாலைகள் பாதுகாப்புக் குழு ஆலோசனைக் கூட்டம்

ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

கொளுத்தும் வெயில்..!

SCROLL FOR NEXT