தமிழ்நாடு

சசிகலாவை ஆட்சி அமைக்க ஆளுநர் உடனே அழைக்க வேண்டும்: செங்கோட்டையன்

DIN

அதிமுக பொதுச் செயலர் சசிகலாவை ஆட்சி அமைக்க ஆளுநர் உடனடியாக அழைக்க வேண்டும் எனவும், அவரது அழைப்புக்காக ஞாயிற்றுக்கிழமை (பிப்.12) வரை காத்திருக்கப் போவதாகவும் அதிமுக அவைத் தலைவர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
சென்னையை அடுத்த கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏ.,க்களுடன் சசிகலா சனிக்கிழமை ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து, கட்சியின் அவைத் தலைவர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கட்சியை வழிநடத்திச் செல்வதற்கும், கட்சி வலிமையோடு இருப்பதற்கும், ஆட்சி, கட்சியில் பொதுச் செயலர் அமர வேண்டும். இதுதான் தமிழக மக்களின் மனதில் இருக்கிறது.
இதைத்தான் சட்டப்பேரவை உறுப்பினர்களும் பிரதிபலித்திருக்கிறோம். சசிகலா முதல்வராகும் வரை, எங்கள் உயிர்மூச்சு இருக்கும் வரை அவர்களுக்காக நாங்கள் உழைப்போம். இதை எங்கள் அத்தனை பேரின் உறுதிமொழியாக நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். ஒரு இம்மி அளவுகூட மாற்று அணிக்கு செல்லும் எண்ணம் எங்கள் யாருக்கும் இல்லை. கட்சியின் பொதுச் செயலர் சசிகலாவை தமிழக முதல்வராக அமர்த்த வேண்டும் என்பதே அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்கள் அத்தனை பேரின் ஒருமித்த கருத்தாக உள்ளது. ஜனநாயகரீதியாக, ஆட்சி அமைப்பதற்கு எங்களை ஆளுநர் அழைக்க வேண்டும். நாங்கள் ஞாயிற்றுக்கிழமை (பிப்.12) வரை காத்துக் கொண்டிருப்போம் என்றார் செங்கோட்டையன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமர் மோடிக்கு எதிரான புகார்: 1 வாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் பதிலளிக்கப்படும் -பாஜக

திருமண விழாவிற்குச் சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்: 6 பேர் பலி!

கோவை தோ்தல் முடிவை வெளியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி

அதிகரித்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

வணங்கான் வெளியீட்டு பணிகள் தீவிரம்!

SCROLL FOR NEXT