தமிழ்நாடு

சென்னை தங்கும் விடுதிகளில் போலீஸார் அதிரடி சோதனை: 105 ரவுடிகள் கைது

DIN

சென்னை முழுவதும் தங்கும் விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களில் போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில், 105 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா இடையே ஏற்பட்டுள்ள கடுமையான மோதல் காரணமாக, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஓரளவுக்கு தான் பொறுமையை காக்க முடியும் அதற்கு மேல் நாம் ஒன்று சேர்ந்து செய்யவேண்டியதை செய்வோம் என்று அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் மிரட்டல் விடும் விதமான பேச்சை தொடர்ந்து சென்னை மற்றும் அதன் சுற்றுபுறங்களில் உள்ள தங்கும் விடுதிகளில் சோதனை நடத்துமாறு காவல்துறைக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது

இதையடுத்து சென்னை முழுவதும் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களில் சோதனை நடத்தி அறிக்கை அளிக்குமாறு மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ் காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து சென்னையில் உள்ள தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்களில் போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்திவருகின்றனர். இதன்படி, பல இடங்களில் தங்கியிருந்த 105 ரவுடிகளை கைது செய்து, விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும், 340 தங்கும் விடுதிகள், 540 திருமண மண்டபங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும் பல இடங்களில் போலீஸார் சோதனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT