தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு போராட்டத்தை சிறுமைப்படுத்தி விட்டனர்: நல்லக்கண்ணு

DIN

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான இளைஞர்கள் நடத்திய தன்னெழுச்சி போராட்டத்தை அரசியல்வாதிகள் சிறுமைப்படுத்தி விட்டனர் என்று கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு குற்றம்சாட்டினார்.
தமிழ் ஈழ போராளிகள் ஜெகன், தங்கத்துரை, குட்டிமணி ஆகியோரின் சிறை வாழ்க்கைப் பதிவாக உருவாகியுள்ள குறும்படம் "புத்த போர்'. ரோஷன் உதயகுமார் இயக்கியுள்ள இப்படத்தின் முதல் திரையிடல் நிகழ்ச்,சி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவில் நல்லக்கண்ணு பேசியது:
புத்தர் எப்போதும் அமைதியை மட்டுமே விரும்பினார். ஜாதி,மதம் என்ற எல்லைகளைக் கடந்து வாழ்ந்தார். அவருக்கு எதன் மீதும் விருப்பமில்லை. இப்படி வாழ்ந்த ஒருவரின் பெயரை "புத்த போர்' என்ற அளவில் சித்தரிப்பது சரியா என்று தோன்றியது. ஆனால், இந்தப் படத்தின் நோக்கம் அதுவல்ல என்று தெரிந்த போது மகிழ்ச்சியாக இருந்தது.
மதம் என்பது மனிதனின் தனி உரிமை. அதில், அரசியல் கலந்து விடக் கூடாது. மீறி, கலந்து விட்டால் நாட்டில் பிளவு ஏற்பட்டு விடும். இளைஞர்கள் இப்போது ஆச்சரியப்படுத்துகிறார்கள். அவர்களின் பாதைகள் வெவ்வேறு எல்லைகளை நோக்கி விரிந்திருக்கிறது. தன்னெழுச்சியாக திரண்ட இளைஞர்கள் ஜல்லிக்கட்டை மீட்டு எடுத்திருக்கிறார்கள்.
அமைதியாக முடிந்து, பெருமையாக கொண்டாடப்பட வேண்டிய அந்தப் போராட்டம், 7-ஆவது நாளில் அரசியல்வாதிகளாலும், அதிகாரத்தாலும் சிறுமைப்படுத்தப்பட்டு விட்டது என்றார் நல்லக்கண்ணு. விழாவில், தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ. நெடுமாறன். திரைப்பட இயக்குநர்கள் கே.பாக்யராஜ், ஆர்.வி.உதயகுமார், ஆர்.கே.செல்வமணி, தயாரிப்பாளர் கே.ராஜா, டி.சிவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் 5 பேருக்கு வெஸ்ட் நைல் காய்ச்சல்!

பூவே.. செம்பூவே..!

வாக்களித்த பிரபலங்கள்!

ஜெயக்குமார் உடல் கூறாய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்

பச்சகுப்பம்: பாலாற்றில் வெள்ளம்!

SCROLL FOR NEXT