தமிழ்நாடு

முதல்வர் பதவியை காப்பாற்றிக் கொள்ள ரூ.1 ஆயிரம் கோடி நிதி: சித்தராமையா மீது எடியூரப்பா குற்றச்சாட்டு

DIN

பெங்களூரு: முதல்வர் சித்தராமையா தனது முதல்வர் நாற்காலியை காப்பாற்றிக் கொள்ள காங்கிரஸ் கட்சியின் மேலிடத்திற்கு ரூ.1 ஆயிரம் கோடி நிதி வழங்கியுள்ளார். இதனை நிரூபித்தால் சித்தராமையா பதவி விலகத் தயாரா என்று பாஜக மாநிலத்தலைவர் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு மல்லேஸ்வரத்தில் இன்று நடந்த பாஜக கட்சியின் செயற்க்குழுக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

முதல்வர் சித்தராமையா தனது முதல்வர் நாற்காலியை காப்பாற்றிக் கொள்ள அனைத்து வழிகளிலும் முயற்சித்து வருகிறார். இதற்காக காங்கிரஸ் கட்சியின் மேலிடத்திற்கு அவர் ரூ. 1 ஆயிரம் கோடி நிதி அளித்துள்ளார். இதனை சட்டமேலவை உறுப்பினரும், முதல்வர் சித்தராமையாவின் நெருங்கிய நண்பருமான கோவிந்தராஜ், தனது நாட்காட்டியில் எழுதி வைத்துள்ளது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான அனைத்து ஆதாரங்கங்களும் என்னிடம் உள்ளது. தேவைப்பட்டால் நானும் இதனை வெளியிடவும் தயாராக உள்ளேன். அப்படி நான் ஆவணங்களை வெளியிட்டால், எனது சவாலை ஏற்று முதல்வர் சித்தராமையா தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT