தமிழ்நாடு

ஆட்சி அமைக்கும் எண்ணத்தில் திமுக இல்லை

DIN

ஆட்சியை அமைக்கும் எண்ணத்தில் திமுக இல்லை என்று கட்சியின் பொதுச்செயலர் க.அன்பழகன் கூறினார்.
சொத்துக் குவிப்பு வழக்கு தாக்கல், அதை பெங்களூருக்கு மாற்றியது, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது என 20 ஆண்டுக்கும் மேலாக இந்த வழக்கு நடத்துவதற்கு க.அன்பழகன் பெரும் பங்கு வகித்தவர்.
இந்த நிலையில், தீர்ப்பு தொடர்பாக அவர் கூறியது: உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. பல்வேறு காலங்களில், நீதிபதிகள் ஒவ்வொரு வகையான தீர்ப்பை அளித்திருந்தாலும், இறுதியில் நீதி வென்றுள்ளது. நியாயம் வெற்றிபெற்றுள்ளது. தீர்ப்பால் குற்றவாளிகள் என்றும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. உண்மையை எப்போதும் அழிக்க முடியாது. தற்போதைய நிலையில் ஆட்சி அமைக்கும் எண்ணத்தில் திமுக இல்லை. அதேபோல வேறு யாரையும் ஆதரிக்கும் எண்ணமும் திமுகவுக்கு இல்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT