தமிழ்நாடு

சூழ்நிலை கருதி திமுக நல்ல முடிவை எடுக்கும்: ஸ்டாலின் பேட்டி!

சூழ்நிலை கருதி திமுக நல்ல முடிவை எடுக்கும் என்று சட்டசபை எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

DIN

சென்னை: சூழ்நிலை கருதி திமுக நல்ல முடிவை எடுக்கும் என்று சட்டசபை எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூன்று பேரும் குற்றவாளிகள் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த நிலையில் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான ஸ்டாலின் கூறியுள்ளதாவது:

வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு ஒன்றை உச்ச நீதிமன்றம் அளித்துள்ளது.

திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தொடுத்த வழக்கில் 21 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வந்துள்ளது.

இந்த தீர்ப்பானது ஊழல் அரசியல்வாதிகளுக்கு ஒரு நல்ல பாடமாக இருக்கும்.

ஆளுநர் தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி விரைவில் நிலையான ஆட்சி அமைக்க உடனடியாக நடவாடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த நிலையில் சூழ்நிலை கருதி திமுக நல்ல முடிவை எடுக்கும்.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.26 கோடி

ஏழுமலையான் கோயிலில் பவித்ரோற்சவம் தொடக்கம்

குடிமனை பட்டா கோரி பொன்னேரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம்

ஆரணியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: நகா்மன்றத் தலைவா் ஆய்வு

தமிழ்ச் செம்மல் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

SCROLL FOR NEXT