தமிழ்நாடு

ஜெயலலிதா குற்றமற்றவர் அல்ல என்பதையே இத்தீர்ப்பு உணர்த்துகிறது! தொல். திருமாவளவன்

தினமணி

ஜெயலலிதா குற்றமற்றவர் அல்ல என்பதையே இத்தீர்ப்பு உணர்த்துகிறது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று உச்சநீதிமன்றத்தின் "இரு நீதியரசர் இருக்கை" அளித்துள்ளத் தீர்ப்பு, தமிழகத்தில் மட்டுமின்றி இந்திய அளவில் ஊழல்சக்திகளுக்குப் பாடம்புகட்டும் வகையில் ஒரு பேரிடியாக அமைந்துள்ளது. இதனை விடுதலைச்சிறுத்தைகள் வரவேற்கிறது.

எனினும், இந்தத் தீர்ப்பு மிகவும் காலங்கடந்து அளிக்கப் படுவதால், தமிழகத்தில் பல்வேறு வகையிலான குழப்பங்களும் நெருக்கடிகளும் ஏற்பட்டுள்ளன என்பதை இச்சூழலில் விடுதலைச்சிறுத்தைகள் சுட்டிக்காட்டுகிறது.

அத்துடன், மறைந்த ஜெயலலிதா காலமானதால் அவர் தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அதாவது, அவர் குற்றமற்றவரென்று இத்தீர்ப்பு கூறவில்லை. எனவே, அவருக்கென வாக்களித்துத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக அரசு மேலும் தொடர்வது, ஜனநாயகத்திற்குப் பாதுகாப்பானதாக அமையாது. இந்நிலையில், அடுத்து பொதுத்தேர்தலை நடத்துவதுதான தீர்வாக அமையும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: பிரதமர் மோடி, அமித் ஷா வெற்றி...

காங்கிரஸ் மூத்த தலைவரை வீழ்த்திய யூசஃப் பதான்!

பிரதமர் மோடி வெற்றி!

ஜம்மு-காஷ்மீரில் தோல்வியைத் தழுவிய முன்னாள் முதல்வர்கள்!

மோடி தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும்: சஞ்சய் ராவத்!

SCROLL FOR NEXT