தமிழ்நாடு

ஜெயலலிதா வசித்த வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றக் கோரிய மனு தள்ளுபடி

DIN

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வசித்த "வேதா நிலையம்' இல்லத்தை அவரது நினைவு இல்லமாக மாற்ற கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதுதொடர்பாக சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த எஸ்.பார்த்திபன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு விவரம்:
அம்மா உணவகம், அனைத்து மகளிர் காவல் நிலையம் போன்ற மக்கள் நலன்சார்ந்த பல்வேறு திட்டங்களை மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிமுகப்படுத்தினார். இந்தத் திட்டங்களால் தினக்கூலி தொழிலாளர்கள், ஏழை மக்கள் உள்பட அடித்தட்டு மக்கள் பயனடைந்து வருகின்றனர். அவரது மறைவுக்கு பின்னர், போயஸ் தோட்டத்தில் உள்ள அவருக்குச் சொந்தமான "வேதா நிலையம்' இல்லத்தை அதிமுகவைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
அவர்கள் யாரும் ஜெயலலிதாவின் சட்டரீதியான வாரிகள் கிடையாது. ஆகையால், அவர் வசித்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றக் கோரி, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு கடந்தாண்டு டிசம்பர் 9 -ஆம் தேதி மனு அளித்தேன். ஆனால், அதன் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. "வேதா நிலையம்' நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் அண்மையில் அறிவித்திருந்தார். அதன் பின்னரும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன்பு வியாழக்கிழமை (பிப்.16) விசாரணைக்கு வந்தது. அப்போது, இதேபோன்ற கோரிக்கையுடன் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது. ஆகையால், இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது எனக் கூறி, தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப் பாதை கோரி கிராம மக்கள் மனு

மழை வேண்டி பெரம்பலூரில் சிறப்புத் தொழுகை

கடன் தொல்லை: இளைஞா் தற்கொலை

திருமானூா் அருகே குடிநீா் விநியோகிக்க கோரி சாலை மறியல்

மே 11-இல் பெரம்பலூா் அங்காளம்மன் கோயில் தேரோட்டம்

SCROLL FOR NEXT