தமிழ்நாடு

தமிழக அமைச்சரவையில் ஒரே புதுமுகம் செங்கோட்டையன்

DIN


சென்னை: தமிழகத்தில் 31 பேர் கொண்ட தமிழக அமைச்சர்களின் பட்டியல் இன்று வெளியானது. அதில், கோபிச்செட்டிப்பாளையம் எம்எல்ஏ செங்கோட்டையன் புது முகமாக இடம்பெற்றுள்ளார்.

பன்னீர்செல்வம் அணிக்குத் தாவிய மாஃபா பாண்டியராஜன் வகித்து வந்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார்.

முதல்வர் பன்னீர்செல்வம் வகித்து வந்த துறைகள் அனைத்தும் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்படுகிறது. அதாவது, காவல்துறை, இந்திய வனத்துறை, பொது நிர்வாகம், நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை உள்ளிட்ட துறைகளை இனி பழனிசாமி கவனிப்பார்.

முதல்வருக்கு அடுத்த நிலையில் திண்டுக்கல் சீனிவாசன் வனத்துறை அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்.

3வது இடம் கே.ஏ. செங்கோட்டையனுக்குக் கிடைத்துள்ளது.  மாஃபா பாண்டியன் வகித்து வந்த பள்ளிக் கல்வித் துறை, தொல்லியத் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஆகியவை இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள புதுமுகம் என்றாலும், அமைச்சர்களின் பட்டியலில் இவருக்கு 3ம் இடம் கிடைத்திருப்பது, பன்னீர்செல்வம் மற்றும் மாஃபா பாண்டியராஜன் இல்லாததே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT