தமிழ்நாடு

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் முடி இறக்கும் பணியில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் நியமனம் ரத்து

DIN

பழனி, தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் முடி இறக்கும் பணியில், 60 வயதுக்கு மேற்பட்டவர்களை நியமனம் செய்த கோயில் நிர்வாகத்தின் உத்தரவை, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்து வியாழக்கிழமை உத்தரவிட்டது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த குப்புராஜ் தாக்கல் செய்த மனு:
பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் தைப்பூசத்தின் போது லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து முடிகாணிக்கை செலுத்துகின்றனர். கோயிலில் முடிகாணிக்கை செலுத்துமிடத்தில் 310 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் முடி இறக்கும் பணியில், 60 வயதுக்கு மேற்பட்டவர்களை கோயில் நிர்வாகம் நியமித்துள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வயது முதுமையால் கை நடுக்கம் ஏற்படுவது இயல்பு. இவர்களை முடி இறக்கும் பணியில் ஈடுபடுத்தினால், முடி இறக்கும்போது பக்தர்களுக்கு காயம் அடைவதற்கு வாய்ப்பு உண்டு. எனவே, முடி இறக்கும் பணியில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை நியமிக்கும் கோயில் நிர்வாத்தின் முடிவுக்கு தடை விதிக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தார்.
இம்மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது, கோயில் நிர்வாகம் தரப்பில், தைப்பூசத் திருவிழாவின்போது, கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், பக்தர்களின் நலன் கருதியும் கூடுதல் பணியாளர்கள் தாற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு, மனுதாரர் முடி இறக்குபவராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 60 வயதுக்கு மேற்பட்டவர்களை பணியில் அமர்த்தினால் என்ன பிரச்னைகள் ஏற்படும் என்பதை நன்றாக அறிந்துள்ளார். மேலும், முடி இறக்கும் பணியில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை, 1989-ஆம் ஆண்டிலிருந்து விடுக்கப்பட்டு வருகிறது. அப்போது, இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாத கோயில் நிர்வாகம், தற்போது 60 வயதுக்கு மேற்பட்டவர்களை நியமித்துள்ளது ஏற்கத்தக்கதல்ல எனக் கூறி, கோயில் நிர்வாகத்தின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை!

சிஎஸ்கே போட்டியில் பிரபலமான ரசிகரை கௌரவித்த லக்னௌ அணி!

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

SCROLL FOR NEXT